தனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு.!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடித்த பிரெஞ்சு-ஆங்கில திரைப்படம் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’. இந்த படம் தமிழில் பக்கிரி என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற நாவலை தழுவி காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் தனுசுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதம் பிரான்சில் ரிலீஸான இந்த படம், தமிழில் வருகிற ஜூன் 21-ந் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒய்நாட் எக்ஸ் சார்பில் சசிகாந்தின் இந்த படத்தை வெளியிடுகிறார்.

அமித் திரிவேதி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார். நிகோலாஸ் எறேரா பின்னணி இசையமைத்துள்ளார்.

இது குறித்து தனுஷ் கூறுகையில் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ இந்தியாவிற்கு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதை என்னை கடினமாக உழைக்கவும், வித்தியாசமான முயற்சிகளில் இறங்கவும் ஊக்குவிக்கும் எனது ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி” என்றார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*