அவர் இசையில் பாட பயம் – ரம்யா நம்பீசன்..!!

ரம்யா நம்பீசனுக்கு வாய்ப்புகள் நிறைய வந்தாலும் பீட்சா, சேதுபதி என்று தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நட்புன்னா என்னனு தெரியுமா? படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் அவர் அளித்த உற்சாக பேட்டி:-

பெரிய ஹீரோக்கள், புது ஹீரோக்கள் பாரபட்சம் இல்லாமல் நடிப்பது ஏன்?

எனக்கு மார்க்கெட் பற்றி கவலை இல்லை. சேதுபதிக்கு பிறகு அதிகமாக அம்மா கதாபாத்திரங்களே வந்தன. இந்த படம் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக வந்தது. முற்றிலும் புதியவர்கள், இளைஞர்கள் என்பதால் ஒப்புக்கொண்டேன். அம்மாவாக நடிப்பதை விட இதுபோன்ற வேடங்களை அதிகம் விரும்புகிறேன். பெரிய ஹீரோ படம் என்றாலே அம்மா வேடங்களாக வருகின்றன.

கவுரவ தோற்றத்தில் அதிகம் நடிப்பது ஏன்?

என்னை கவுரவ நடிகையாகவே மாற்றி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. எல்லாம் நண்பர்களுக்காக நடித்தவை. இனி குறைத்துக்கொள்வேன். நான் தேர்ந்தெடுத்து எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வேன்.

அடுத்து?

விஜய் ஆண்டனியுடன் தமிழரசன் படத்தில் நடித்து வருகிறேன்.

அந்த படத்துக்கு இளையராஜா இசை. அதில் பாட வாய்ப்பு உண்டா?

அவர் இசையில் பாட எனக்கு பயம். இளையராஜா 75 நிகழ்ச்சியில் அவர் முன்பு பாடியதே நான் செய்த பாக்கியம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*