இவர் டான் கிடையாது, டானுக்கு எல்லாம் டான் – ராகுல் தாத்தா..!!

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா – ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கொரில்லா’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

விழாவில் ராகுல் தாத்தா பேசியதாவது,

“இந்த படத்தில் நான் ஒரு சாதாரண கேரக்டர் பண்ணிருக்கேன். இந்த காலத்தில் கொரில்லாவை வைத்து படமெடுப்பது ரொம்ப கஷ்டம். நிறைய செலவு செய்திருக்கிறார்கள். அற்புதமா படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் டான் சாண்டி. எனக்கு அற்புதமான கேரக்டர் கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் ஓகோன்னு ஓடணும். படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் அனைவரும் ஹிந்தி, தெலுங்கு, என ஒவ்வொன்றையும் வாங்கி கொண்டுப் போய்விட்டார்கள்.

இந்த இயக்குநர் டான் கிடையாது, டானுக்கு எல்லாம் டான். சாம்.சி.எஸ் பிரமாதமாக வேலை செய்திருக்கிறார். இந்தப் படத்திற்குப் பின் இப்படக்குழு அனைவரும் வேறு லெவலுக்கு செல்வார்கள்” என்றார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*