நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் அடுத்த படத்திற்கு `நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என தலைப்பு வைத்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு `யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

கார்த்திக் வேணுகோபால் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடிக்க, ஷிரின் கஞ்ச்வாலா நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் யூடியூப் பிரபலங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். ஷபீர் இசையமைக்க, யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*