அனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்? -அதிர்ச்சி தகவல்..!!

மீண்டும் பிரதமராக மோடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ளார். இதையடுத்து மோடிக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், உலக தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், திரைப்பட கலைஞர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமான இதில் வில்லனாக நடித்தபாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் பிரதமராக பதவி ஏற்க உள்ள மோடிக்கு வாழ்த்துக் கூறினார்.

சினிமாவில் வில்லனாக கலக்கிய அனுராக், மோடியை தனது டுவிட்டரில் டேக் செய்து வாழ்த்துச் செய்தியில் மோடியினை டுவிட்டரில் பின்தொடரும் ஒருவரை சுட்டிக்காட்டி, ‘அன்பான மோடி அவர்களே, நீங்கள் வெற்றி பெற்றதற்கு என் வாழ்த்துக்கள். இந்த வெற்றி அனைவரையும் உள்ளடக்கிய வெற்றி என நீங்கள் கூறியதற்காக உங்களுக்கு நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேசமயம் நான் உங்கள் எதிர்ப்பாளராக இருப்பதால், உங்களை பின்தொடர்பவர்கள் என் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதுபோல் குறுஞ்செய்திகள் அனுப்புகின்றனர். இதுபோன்றவர்களை நாங்கள் எப்படி கையாள்வது? என கூறுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

இந்த வாழ்த்துச்செய்தி ரசிகர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனுராக்கிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*