கவர்ச்சியாக நடிக்க தயார் – ரகுல் ப்ரீத் சிங்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை ரகுல் பிரீத்திசிங். ‘தடையற தாக்க’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் நல்லவிதமாக அமைந்தது. கார்த்தியுடன் தொடர்ந்து ‘தேவ்’ படத்தில் நடித்தவர், தற்போது சூர்யாவுடன் ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் வருகிற 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் ரகுல் இந்தியில் டெ டெ பியார் டெ என்ற படத்தில் அதிக கவர்ச்சியில் நடித்தார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ’நிறைய இயக்குனர்கள், நடிகர்களுடன் படம் பண்ணுகிறேன். எப்போதுமே முழுக் கதையையும் கேட்பேன். அதில் என் கதாபாத்திரம் எந்த அளவுக்கு அழுத்தமாக இருக்கிறது என்று பார்ப்பேன்.

எனக்கு கொஞ்சம் பிடிக்கவில்லை என்றாலும் அந்த படத்தில் கமிட் ஆகமாட்டேன். இந்தியில் நான் நடிச்ச `டெ டெ பியார் டெ’யில் கவர்ச்சி வேடம் பண்ணியிருக்கேன். காரணம், அந்த படத்துல எனக்கு முக்கியத்துவம் அதிகம். மொத்தம் மூணு கேரக்டர்களைச் சுத்திதான் படம் நகரும். தவிர, அது ஒரு சூப்பர் கேரக்டர். கிளாமர் இருக்கோ இல்லையோ… நல்ல கதைகள்தான் என் சாய்ஸ்’. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

கவர்ச்சிக்கு தயார் என்று கூறியதோடு படுகவர்ச்சியான படம் ஒன்றையும் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*