நெல் ஜெயராமனின் வாழ்க்கையை படமாக்கும் சசிகுமார்..!!

திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நெல் ஜெயராமன். அரிய வகை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் உயிரிழந்தார்.

நெல் ரகங்களைத் தேடிக் காத்த நெல் ஜெயராமன் குறித்த செய்தியை இந்த வருட 12ம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் பாடமாக தமிழக அரசு வைத்திருக்கிறது.

பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடிக் காத்த #நெல்_ஜெயராமன் குறித்த செய்தியை இந்த வருட 12ம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் பாடமாக வைத்திருக்கிறது தமிழக அரசு.
9ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஜெயராமன், தன் வாழ்நாளையே விவசாயத்துக்காக அர்ப்பணித்த விதத்தில் பாடமாகவே மாறி இருக்கிறார்!

இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான சசிகுமார், இவருடைய வாழ்க்கை படமாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘இன்று பாடமாக வந்திருக்கும் உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்பும் விரைவில் படமாக வரும்… அதற்கான பணிகளில் நாங்கள் இருக்கிறோம்’ என்று பதிவு செய்திருக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*