விஷ்ணு விஷால் இடத்தை பிடித்த சந்தீப் கிஷன்..!!

தமிழ் சினிமாவில் வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்குவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலான படங்கள் முதல் பாகத்தை போல இரண்டாம் பாகம் பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. என்றாலும் இந்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்‌‌ஷன் பாணியில் உருவாகி வெற்றி பெற்ற ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல் பாகத்தில் விஷ்ணு விஷால் நடித்து இருந்தார். இரண்டாம் பாகத்தில் மாநகரம், நரகாசூரன் ஆகிய படங்களில் நடித்துள்ள சந்தீப் கி‌ஷன் கதா நாயகனாக நடிக்க உள்ளார்.

ரவிக்குமாரின் உதவி இயக்குநர் இந்தப் படத்தை இயக்க உள்ளார். நாயகியாக முதல் பாகத்தில் நடித்த மியா ஜார்ஜ் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*