உறுதி செய்யப்பட்ட விஜய்யின் அடுத்த பட இயக்குனர்..!!

விஜய் தற்போது தளபதி 63 படத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படமான தளபதி 64 படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைதளங்களில் பெரிய விவாதமே நடக்கிறது.

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் லோகேஷ் கனகராஜ், அருண்ராஜா காமராஜ் பெயர்கள் அடிபட்ட நிலையில், விஜய் – லோகேஷ் கனகராஜ் உடன் இணைவது உறுதியாகி இருப்பதாக விஜய்க்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படம் குழந்தைகள் ரசிக்கும்படியாக பேண்டஸி கலந்த திரில்லர் பாணியில் உருவாகுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா நடிப்பதாகவும், ராஷ்மிகா மந்தானா நடிப்பதாகவும் சில வதந்திகள் பரவி வருகிறது. விஜய், தளபதி 63 படத்தை முடித்த பிறகு படத்தின் நாயகி மற்றும் மற்ற கதபாத்திரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவிருப்பதாக தெரிகிறது.

அட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு, ரெபா மோனிகா, வர்ஷா பொலம்மா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது. ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கு இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*