வேட்டைக்காரனாக களமிறங்கும் கரு.பழனியப்பன்..!!

இயக்குனர்கள் அமீர், ராம் ஆகியோரிடம் பணியாற்றிய சந்திரா இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘கள்ளன்’. இதில் இயக்குனர் கரு.பழனியப்பன் ஹீரோவாக நடித்துள்ளார். படம் குறித்து சந்திரா கூறியதாவது: வெவ்வேறு காலக்கட்ட பின்னணியில் உருவான கதை இது. 1988-89-ல் ஒரு கதையும், 1975-ல் இன்னொரு கதையும் நடக்கும்.

தேனி அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் ஒருவனுக்கு வேட்டையாடுவதை தவிர, தனது வாழ்வாதாரத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது. வேட்டையாடுவதை அரசாங்கம் தடை செய்யும்போது, காலம் அவனுடைய வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதை பதிவு செய்துள்ளேன்.

வேட்டைக்காரனாக கரு.பழனியப்பன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிகிதா அறிமுகமாகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்டார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*