பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் ஹரிஷ் கல்யாண்..!!

“பியார் பிரேமா காதல்” மற்றும் “இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்” போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள இவர், தற்போது அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் “தனுசு ராசி நேயர்களே” படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து இந்தியில் வெளியாகி ஹிட்டான “விக்கி டோனர்” படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் நடிக்க உள்ளார். முழுக்க முழுக்க காதலையும், காமெடியையும் மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்க உள்ளார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.

இதன்பின்னர் பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளதாகவும், அதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இயக்குனர் சசி இயக்கியுள்ள ” சிவப்பு மஞ்சள் பச்சை” படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*