அசரீரி மூலம் ரீஎண்ட்ரி கொடுக்கும் ஜீவன்..!!

அறிமுக இயக்குனர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் ‘அசரீரி’ படத்தில் நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து தயாரிப்பாளர் ஐ.பி.கார்த்திகேயன் கூறும்போது, “டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியினால், புராண குறிப்புகளை கூட தொழில்நுட்பம் சார்ந்து வழங்குவதில் தற்போதைய தலைமுறை கவனம் செலுத்துகிறது. தனிப்பட்ட முறையில், அத்தகைய விஷயங்களில் நான் எளிதில் கவனம் செலுத்தி விடுவேன், இயக்குனர் ஜி.கே. ஸ்கிரிப்ட்டை எனக்கு விவரிக்கும்போது எனக்கு மிகவும் ஆர்வம் தொற்றிக் கொண்டது.

இயக்குனர் ஜி.கே. கூறும்போது, “அசரீரி என்பது ஒரு நாவல் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அறிவியல் புனைவு திரில்லர் படம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதை ரசிப்பார்கள், குறிப்பாக தம்பதிகள் இந்த படத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்” என்றார்.

நடிகர் ஜீவன் பற்றி அவர் கூறும்போது, “ஜீவன் கதைகளை மிகவும் தேர்ந்தெடுத்து நடிப்பவர். அவசரமாக அவர் ஒருபோதும் இருந்ததில்லை. உண்மையில், அவர் இந்த படத்தை ஒப்புக் கொள்வாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. அவர் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட ஒருவராக இருந்ததால், இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. உடனடியாக ஒப்புக் கொண்டார். அவர் இதுவரை நடித்த படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். தற்போது நாயகி உட்பட மற்ற நடிகர், நடிகைகள் இறுதி செய்வதற்கான பணியில் நாங்கள் இருக்கிறோம்” என்றார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*