டகால்டி காட்டும் சந்தானம்..!!

காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடித்த ‘தில்லுக்கு துட்டு’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘தில்லுக்கு துட்டு 2’ போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

ஷங்கரின் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்திற்கு ‘டகால்டி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகா சென் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் சந்தானம் நண்பராக யோகிபாபு நடிக்கிறார். மேலும் ராதாரவி, சந்தான பாரதி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பின்னணி பாடகர் விஜய் நாராயணன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*