உலக கோப்பை கிரிக்கெட்- நடுவரின் தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகர் தனுஷ்..!!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இப்போட்டியின் நடுவர்களின் தீர்ப்புகள் பல முறை தவறாக அமைந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்யும்போது பல முறை ஆஸ்திரேலிய அணி பௌலரின் அப்பீலுக்கு நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் உண்மையில் நாட் அவுட் என்பது மூன்றாம் அம்பயரிடம் ரிவ்யூ கேட்டதன் மூலம் தெரியவந்தது.

குறிப்பாக கிறிஸ் கெய்ல் விளையாடும்போது தொடர்சியாக மூன்று முறை அம்பயர் அவுட் கொடுத்தார். அதில் இரு முறை கெய்ல் தப்பித்தார். மூன்றாவது முறை கள அம்பயரின் தீர்ப்பே இறுதியானது எனும் தீர்ப்பால் கெய்ல் அவுட் ஆனார்.

நேற்றைய போட்டியின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் நடுவர்களின் முடிவை கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

நேற்று போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கார்லஸ் பிராத்வெய்ட், நடுவர்களின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார்.

இதையடுத்து நடிகர் தனுஷ் நடுவர்களின் தீர்ப்பை விமர்சித்து ஒரு ட்வீட் பதிவிட்டிருக்கிறார்.

”வெஸ்ட் இண்டீஸ் எப்படியும் வென்றுவிடக் கூடாது என நடுவர் விரும்புகிறார். வெஸ்ட் இண்டீஸ் கடுமையாக போராடியது. நடுவரின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருப்பது உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. நடுவரின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக உள்ளது” என தனுஷ் விமர்சனம் செய்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*