பா.ரஞ்சித் படத்தில் மூன்று ஹீரோக்கள்..!!

‘அட்டக்கத்தி’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார் பா.ரஞ்சித். இதையடுத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார். இதன்பின்னர் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து படங்களை இயக்கி வெற்றி கண்டார்.

சமீபத்தில் ‘ராஜராஜ சோழன்’ குறித்து அவதூறாக பேசி சர்ச்சைகளில் சிக்கினார். இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், பா.ரஞ்சித் மல்டி ஸ்டார் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது இப்படத்தில் ஆர்யா, ராணா மற்றும் சத்யராஜ் ஆகிய மூவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் மேலும் ஒருசில பிரபலங்கள் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*