லிங்குசாமி இயக்கத்தில் லாரன்ஸ்..!!

ஆனந்தம், ரன், சண்டகோழி, பையா என ஹிட் படங்களை கொடுத்தவர் லிங்குசாமி. அவர் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஆக்‌‌ஷன் திரைப்படமாக உருவாகும் இதில் கதாநாயகனாக ராகவா லாரன்சை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா 3 திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீசாகி வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் காஞ்சனா 4 திரைப்படத்தின் தயாரிப்பு பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதுதவிர லாரன்ஸ் அக்‌‌ஷய் குமாரை கதாநாயகனாக கொண்டு காஞ்சனா திரைப்படத்தை இந்தியில் ‘லக்‌ஷ்மி பாம்’ என்ற பெயரில் ரீமேக் செய்துவருகிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*