வெண்ணிலா கபடி குழு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

2009-ஆம் ஆண்டு கபடி போட்டியை பிரதானப்படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”.

இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், பரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது.

மீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் முலக்கதையில், இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் “வெண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் உருவாகி இருக்கிறது.

வெண்ணிலா கபடி குழு 2 பட போஸ்டர்

இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். சந்தோஷ், பசுபதி, பரோட்டா சூரி, கிஷோர், கஞ்சா கருப்பு, அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ‘வெண்ணிலா கபடி குழு 2’ படம் வருகிற 12-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*