மியா ஜார்ஜ் இடத்தை பிடித்த பிரியா பவானி சங்கர்..!!

`மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். கார்த்தியின் `கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த மான்ஸ்டர் படம் கூட செம ஹிட் அடித்தது.

இவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மாஃபியா படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இன்று நேற்று நாளை 2 பட போஸ்டர்

இந்நிலையில், பிரியா பவானி சங்கர் இன்று நேற்று நாளை படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. முதல் பாகத்தில் மியா ஜார்ஜ் ஹீரோயினாக நடித்திருந்தார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*