சித்தார்த், அரவிந்த் சாமியுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பிடித்த படம், `தி லயன் கிங்’. வரும் ஜூலை 19ந்தேதி வெளியாகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான `தி லயன் கிங்’ படத்தின் டிரெய்லர், யூடியூபில் இதுவரை 36 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இப்படத்தின் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய வெர்‌ஷன்களின் டிரெய்லர்களும் சமீபத்தில்தான் வெளியாயின. இதில் இடம்பெறும் முக்கியமான கதாபாத்திரங்களுக்கு, யார் யார் டப்பிங் பேசியிருக்கிறார்கள் என வெளியிடப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்தி பதிப்பில் ஷாருக்கானும் அவரின் மகனான ஆர்யன் கானும் டப்பிங் பேசுகின்றனர். தமிழ் வெர்‌ஷனில் சித்தார்த், அரவிந்த் சுவாமி, ரோபோ சங்கர், ஐஷ்வர்யா ராஜேஷ் போன்றவர்களும், தெலுங்கில் நானியும் டப்பிங் பேசுகின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*