லண்டனில் இருந்து புதிய படத்தை தொடங்கும் தனுஷ்..!!

நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து துறை செந்தில்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்க இருப்பதாகவும், 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

கார்த்திக் சுப்புராஜ், தனுஷ்

3 ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் ஒருசில காரணங்களால் அது தடை பட்டது. இந்த இடைவேளையில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படைத்த இயக்கி வெற்றி கண்டார் கார்த்திக் சுப்புராஜ்.


Post a Comment

CAPTCHA
Refresh

*