ஜிப்ரான் இசையில் பாடிய அனிருத்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் இசை அமைப்பது மட்டுமல்லாது பாடல் பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் ஜிப்ரான் இசையமைத்து வரும் ‘சிக்ஸர்’ படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.

இதுகுறித்து ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில், ‘எனது இசையில் அனிருத் முதன்முறையாக பாடியுள்ளார். “பாபா பிளாக் ஷிப்” என தொடங்கும் பாடலை பாடியுள்ளார்’. என பதிவிட்டுள்ளார்.

வைபவ் நடித்துள்ள ‘சிக்ஸர்’ படத்தை அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவ் ஜோடியாக பல்லக் லால்வானி நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.


Post a Comment

CAPTCHA
Refresh

*