பிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுத்த ரன்வீர் சிங்..!!

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு முதன் முதலாக உலக கோப்பையை வென்றது. இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, ‘83’ என்ற பெயரில் பாலிவுட்டில் ஒரு படம் தயாராகி வருகிறது.

இந்த படத்தை ‘பஜ்ரங்கி பைஜான்’, ‘ஏக் தா டைகர்’ படங்களின் இயக்குநர் கபீர் கான் இயக்குகிறார். இந்த படத்தில் கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்க, நடிகர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடிக்கிறார்.

83 படத்தில் ரன்வீர் சிங்

இன்று ரன்வீர் சிங் பிறந்தநாளை முன்னிட்டு 83 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் காட்சி அளிக்கிறார். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*