பல கோடி ரூபாயில் கேரவன் வாங்கிய அல்லு அர்ஜுன்..!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களிள் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது பெயரிடப்படாத இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவர் விலை உயர்ந்த கேரவன் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதன் உள் மற்றும் வெளி புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

சுமார் பல கோடிக்கு ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ள இந்த கேரவனுக்கு பால்கன் என்று பெயரிட்டுள்ளார் அல்லு அர்ஜூன். மேலும் ஆங்கிலத்தில் ஏஏ என்று தன்னுடைய சிம்பிளை அதில் பதித்துள்ளார். பல கோடிக்கு வாங்கிய இந்த கேரவனுக்கு மேலும் கூடுதலாக ரூ. 3 கோடியை டிசைனுக்கு செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன்

இதுகுறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளது, “என் வாழ்க்கையில் நான் பெரிதாக எதையாவது ஒன்றை வாங்கினால், எனக்கு ஒன்றே ஒன்றுதான் என் நினைவில் தோன்றும். அது என்ன என்றால், ‘மக்களின் அன்பு. அந்த அன்புதான் என்னை இப்படி விலையுயர்ந்த பொருட்களை கூட வாங்க வைக்கிறது’ மிக்க நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*