தம்பி ராமையை மகன் நடிப்பில் உருவாகும் தண்ணி வண்டி..!!

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிப்பில் உருவாகும் படம் ‘தண்ணி வண்டி’. ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உதவியாளராக நீண்டகாலமாக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வில் அம்பு புகழ் சம்ஸ்கிருதி நாயகியாக நடித்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் மாணிக்க வித்யா கூறும்போது, “தண்ணீர் பிரச்சினைக்கும் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, அடிப்படையில் நாயகன் மதுரையில் ஒரு தண்ணீர் சப்ளையர், அவர் ஒரு குடிகாரராகவும் இருக்கிறார். எனவே கதைக்கு இயல்பாக இரண்டுக்கும் பொருந்தும் வகையில் இந்த தலைப்பை வைத்தோம். அதே நேரத்தில் கதை, நீர் நெருக்கடியை பற்றியதும் அல்ல, எல்லா நேரத்திலும் நாயகன் மதுவுக்கு அடிமையானவராகவும் காட்டப்படவில்லை. இது நாயகனுக்கும், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரிக்கும் இடையிலான நகைச்சுவையான மோதலை சுற்றி நிகழும் கதை” என்றார்.

தம்பி ராமையா

இந்த படத்தில் தம்பி ராமையா நாயகன் அப்பாவாக நடிக்க, தேவதர்ஷினி, பாலசரவணன், வித்யுலேகா, சேரன் ராஜ், மனோஜ் குமார், ஜார்ஜ், பாவா லட்சுமணன், ‘காதல்’ சுகுமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஜி சரவணனின் ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் தண்ணி வண்டி திரைப்படத்தை தங்களின் 3வது தயாரிப்பாக உருவாக்கி வருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*