சிம்புவுக்கு 500 அடி நீள போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்..!!

சிம்பு தன்னுடைய தந்தையான டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான ‘உறவை காத்த கிளி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். வெள்ளித்திரையில் அவர் கால்பதித்து 35 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

போஸ்டர்

இந்நிலையில், மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தல்லாகுளம் செல்லும் சாலை ஓரத்தில் 500 அடி நீள பிரம்மாண்ட போஸ்டரை அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். அதில் சிம்புவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

போஸ்டர்

இந்த புகைப்படங்களை சிம்பு ரசிகர்கள் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த போட்டோவும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு முன்னர் விஜய்க்கு 440 அடியில் போஸ்டர் ஒட்டப்பட்டது. தற்போது அதை மிஞ்சும் வகையில் 500 அடியில் சிம்புவுக்கு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*