விமலின் புதிய படம் சோழ நாட்டான்..!!
களவாணி 2 படத்தை தொடர்ந்து விமல் நடிக்கும் படத்திற்கு “சோழ நாட்டான்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் பட்டுக்கோட்டை “ரஞ்சித் கண்ணா” இயக்குகிறார், மரகதகாடு படத்தின் ஒளிப்பதிவாளர் “நட்சத்திர பிரகாஷ்” ஒளிப்பதிவு செய்கிறார்.
பாடல்கள் “மணிஅமுதவன்” மற்றும் “சபரீஷ்” எழுதுகிறார்கள். ஹரிஷ் பிலிம் புரோடக்ஷன் சார்பாக “பாரிவள்ளல்” தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மற்றும் முன்னணி நாயகி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது விரைவில் அதை படக்குழு அறிவிக்கவுள்ளது.