By July 25, 20190 CommentsReport

சூப்பர் ஹீரோவாக களமிறங்கும் ராகவா லாரன்ஸ்..!!!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி’. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா’, `காஞ்சனா 2′, காஞ்சனா 3 ஆகிய பாகங்களாக இயக்கி நடித்து வெற்றி கண்டார். காஞ்சனா 3வது பாகத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் ராகவா லாரன்ஸ். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

விரைவில் இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.


Post a Comment

CAPTCHA
Refresh

*