தமிழில் வெளியாகும் சமந்தாவின் ஓ பேபி..!!
சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ‘ஓ பேபி’. ‘மிஸ் கிரானி’ என்னும் கொரியன் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பாட்டியாக லட்சுமியும் பேத்தியாக சமந்தாவும் நடித்திருந்தார்கள்.
10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், தெலுங்கில் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் படத்தின் ரிலீஸ் சமயத்தில் சமந்தாவிற்கு ரசிகர்கள் 60 அடி உயரத்துக்கு கட்அவுட் வைத்திருந்தனர்.
சமந்தா
அதிக வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது தமிழில் டப் செய்யப்பட இருக்கிறது. மேலும், இம்மாதம் படத்தை வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.