கிரைம் கதையில் நித்யா மேனன்..!!!
மெர்சல் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நித்யா மேனன் அதனை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தி அயர்ன் லேடி என்ற படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க ஒப்பந்தமானவர் அதற்கான பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
அதே சமயம், மலையாளத்தில் இவர் நடித்துள்ள கொளம்பி என்ற படமும், இந்தியில் அக்ஷய் குமாருடன் நடித்துள்ள மிஷன் மங்கள் என்ற படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ள மற்றொரு மலையாள படம் ஆறாம் திருகல்பனா.
நடிகை நித்யாமேனன்
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷைன் டாம் சாக்கோ இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே மையம் கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கிரைம் கதையாக உருவாகும் படமிது.
நித்யா மேனனுக்கு வலுவான கதாபாத்திரமும் ஷைன் டாம் சாக்கோவுக்கு காவல் துறை அதிகாரி கதாபாத்திரமும் அளிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 20ந்தேதியிலிருந்து கோழிக்கோட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அஜய் தேவலோகா இப்படத்தை இயக்க உள்ளார். இதற்கு முன் இவரது இயக்கத்தில் வெளியான ‘ஹூ’ என்ற படம் கேன்ஸ் திரைப்படவிழாவில் பங்குபெற்றது.