By August 22, 20190 CommentsReport

கிறிஸ்துமஸ் ரிலீசுக்கு தயாராகும் பட்டாஸ்..!!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் ‘பட்டாஸ்’. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வரும் இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என தகவல் வெளியான நிலையில், தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் திரைக்கு வருகிறது. மேலும் சூர்யாவின் சூரரைப் போற்று படமும் அப்போது ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*