By August 23, 20190 CommentsReport

நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் – பிரேம்ஜி..!!

S3 பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நாயகி யாஷிகா ஆனந்த், இயக்குனர் புவன் நல்லான், இசையமைப்பாளர் பிரேம்ஜி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

இதில் பிரேம்ஜி பேசும்போது, சில தினங்களுக்கு முன்பு கேம் ஓவர் என்று எழுதப்பட்ட டி.சர்ட்டை போட்டு போட்டோ போட்டிருந்தேன். இதைப் பார்த்த பலரும் எப்போது திருமணம், யார் பெண், வாழ்த்துகள் என்று கூறினார்கள். ஆனால் உண்மையில் திருமணம் ஆனால், கேம் ஓவர் இல்லை. கேம் ஆன் என்று சொல்ல வந்தேன். அதை எல்லோரும் தவறாக புரிந்துக் கொண்டார்கள்.

நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான். கவலைப்படாதீங்க.. என்றார். மேலும் ‘யோகிபாபுவை எனக்கு மிகவும் பிடிக்கும். ரீ ரெக்கார்டிங் செய்யும்போது அவரின் நகைச்சுவையைப் பார்த்துத் தனியாக சிரித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அபிமான நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்கும் படத்திற்கு இசையமைத்ததில் மகிழ்ச்சி. இறுதிக் காட்சியில் அமைந்த சண்டைக் காட்சிகள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் எனக்கு பட்டப்பெயர் மாறிக்கொண்டேயிருக்கும். அதேபோல் தான் இந்த படத்திற்கு ‘இசை காட்டேரி’ என்று வைத்துக் கொண்டேன்’ என்றார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*