By August 25, 20190 CommentsReport

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் பிகில் பட நடிகை..!!

`கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படம் ‘காக்கி’. வாய்மை படத்தை இயக்கிய ஏ.செந்தில் குமார் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும் ஸ்ரீகாந்த், சத்யராஜ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேயாத மான் புகழ் இந்துஜா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகும் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்துள்ளார்.

இந்துஜா, விஜய் ஆண்டனி

காக்கி படத்தை வருகிற டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காக்கி படத்தை தொடர்ந்து, `அக்னிச் சிறகுகள்’, `தமிழரசன்’ மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட படம் என அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.


Post a Comment

CAPTCHA
Refresh

*