By September 4, 20190 CommentsReport

சாதனை மேல் சாதனை படைக்கும் வெறித்தனம் பாடல்..!!

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில், விஜய் பயிற்சியாளராக நடித்திருக்கிறார்.

படத்தில், கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெரிப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கபட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான `சிங்கப்பெண்ணே’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் நேற்று வெளியானது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தபாடல் வெளியான சில நிமிடங்களிலே டிரண்டானது. இப்பாடல் வெளியான 19 மணி நேரத்தில் 50 லட்ச பார்வையாளர்களையும் 7.35 லட்ச லைக்குகளையும் பெற்றுள்ளது.

இன்னும் 24 மணி நேரங்களே முடியாத நிலையில் ஒரு நாளில் அதிகம் லைக் செய்யப்பட்ட லிரிக்கில் வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது. விஸ்வாசம் படத்தில் இருந்து வெளியான அடிச்சு தூக்கு பாடல் லிரிக்கல் வீடியோ இதுவரை 6.97 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. ஆனால் நேற்று வெளியான வெறித்தனம் பாடல் தற்போது வரை 7.35 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.

உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் யூடியூப்பில் அதிகம் பார்க்கபட்ட வீடியோக்கள் பட்டியலில் வெறித்தனம் பாடல் 45 லட்சம் பார்வையாளர்களை கடந்து 4-வது இடத்தில் இருப்பதாக சோனி மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

பாடலில் இடம்பெற்றுள்ள ‘அவன் வரவரைக்கும் வாய்ஸ கொடுத்து நண்டு சிண்டு தொகுருது; அவன் எழுந்து கிழுந்து வந்தானா இந்த தீபாவளி நம்பள்து’ என்கிற வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை குறிக்கிறதா? என்கிற விவாதத்தையும் எழுப்பியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*