By September 23, 20190 CommentsReport

திரிஷாவின் பரமபதம் விளையாட்டு படத்தின் புதிய அப்டேட்..!!

திரிஷா நடிப்பில் தற்போது `சதுரங்கவேட்டை 2′, `கர்ஜனை’ `பரமபதம் விளையாட்டு’, ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதில் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து சென்சாருக்கு சென்றுள்ளது. படத்தை பார்த்த குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து அக்டோபர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் தீவிரம் காண்பித்து வருகின்றனர்.

திருஞானம் இயக்கியுள்ள இந்த படத்தில் திரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடித்துள்ளார். நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

24 Hrs நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் கணேஷ் இசையமைத்திருக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*