By October 6, 20190 CommentsReport

தீபாவளிக்கு மோதும் தளபதி 64 படக்குழுவினர்..!!

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

அதுபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கைதி’. இதில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘சங்கத் தமிழன்’ திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 64 படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், வில்லன் விஜய் சேதுபதி, இவர்கள் மூன்று பேரும் தற்போது இணைந்து பணியாற்றி வரும் நிலையில், தீபாவளிக்கு மோதுவது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*