டாக்டராகிறார் சிவகார்த்திகேயன்..!!
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ஹீரோ திரைப்படம் உருவாகியுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்க இருக்கிறார்கள். இந்த புதிய படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 6ம் தேதி தொடங்க இருக்கிறது.
கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரடொக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.