By February 1, 20200 CommentsReport

அவரை ஹீரோவாக்கி என்னை டம்மி ஆக்கிவிட்டனர் – உதயநிதி ஸ்டாலின் புலம்பல் !

சைக்கோ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய அப்படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் படத்தில் வில்லன் நடிகர் ராஜ்குமாரை ஹீரோவாக்கி விட்டு என்னை டம்மியாக்கி விட்டனர் என சொல்லியுள்ளார்.

மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உலகம் முழுவதும் கடந்த 24ம் தேதி வெளியான திரைப்படம் சைக்கோ. இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். பரவலான பாராட்டைப் பெற்று வரும் இந்த படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘ மிஷ்கின் இந்த கதையை சொன்னபோது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் கண் தெரியாதவனாக நடித்தால் படம் ஓடாது என அனைவரும் சொன்னார்கள். ஆனால் படத்தை மிஷ்கின் அருமையாக எடுத்துள்ளார். ஆனால் படத்தில் ராஜ்குமாரை ஹீரோவாக்கி விட்டு என்னை டம்மியாக்கிவிட்டார்.’ என சிரித்துக் கொண்டே பேசினார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*