By February 8, 20200 CommentsReport

அப்பா-மகள் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் விஜய்சேதுபதி பட இயக்குனர்!


தமிழ் திரையுலகில் சீனியர் நடிகர்களும் அவர்களுடைய வாரிசுகளும் இணைந்து நடிப்பது புதிதல்ல. சிவாஜி-பிரபு, சிவகுமார்-சூர்யா, சத்யராஜ்-சிபிராஜ் உள்பட பல நடிகர்கள் தங்கள் வாரிசுகளுடன் நடித்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது அருண் பாண்டியனும் அவரது மகளும் ஒரே படத்தில் நடிக்கவுள்ளனர்.
மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் ’ஹெலன்’.இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் அருண் பாண்டியனும் அவருடைய மகள் கீர்த்தி பாண்டியனும் நடிக்க உள்ளனர். கீர்த்தி பாண்டியன் ஏற்கனவே தும்பா’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் அருண்பாண்டியனின் தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓவாக பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரிந்ததே
அருண்பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் அப்பா-மகளாக நடிக்கவுள்ள ‘ஹெலன்’ ரீமேக் படத்தை கோகுல் என்ற இயக்குனர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே
விஜய் சேதுபதி நடித்த ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’ போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர் மலையாளத்தை போலவே தமிழிலும் இந்த படம் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Post a Comment

CAPTCHA
Refresh

*