தண்ணீர் விழிப்புணர்வு குறித்து பாடல் – ஏ.ஆர்.ரஹ்மான்…!!!
இந்த உலகில் அடுத்து ஒரு போர் வந்தால் அது தண்ணீருக்காகத் தான்
இருக்கும் என பரவலாக பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், உலக வெப்பமயம் ஆவதாலும் இமயமலை மற்றும் அண்டார்டிக் பனிப்பாறைகள் உருகி வருவதாலும் உலகம் அபாய கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள்
பலரும் எச்சரிக்கை தெரிவித்து வருகின்றனர்.
உலகில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தான் நிலம் உள்ளது போல் அதில், 98.5 சதம் மாசடைந்த நீராக உள்ளது. மீதமுள்ள 3.5 சதம் தான் ஆறு, குட்டை , ஏரிகளில் உள்ள குடிக்கும் நீராக உள்ளது.
மேலும் உடலில் 97 சதம் கடலில் உள்ளது, மீதமுள்ள 3 சத நீரைத்தான் பலநூறு கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆஸ்கார் விருது பெற்ற இந்திய சினிமாவில் பிசியான மியூஸிக் கம்போசரான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தண்ணீர் விழிப்புணர்வு குறித்து பாடல் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
தண்ணீர் விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வை இளம் தலைமுறையிடம் ஏற்படுத்த தவறிவிட்டோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், தண்ணீர் விழிப்புணர்வு தொடர்பாக உலக அளவிலான ஒரு பாடல் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த முயற்சிக்கு பலரும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துகளையு தெரிவித்து வருகின்றனர்.