By February 12, 20200 CommentsReport

விஜய்யின் ‘குட்டிக்கதை’யை கேட்க வேண்டுமா? பிப்ரவரி 14ல் ரிலீஸ்!

விஜய்யின் ‘குட்டிக்கதை’யை கேட்க வேண்டுமா?விஜய் நடித்துவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இன்னும் கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே மீதம் இருப்பதாகவும் அதுவும் அடுத்த வாரம் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினர்களிடமிருந்து தகவல் வெளிவந்துள்ளது
இதனை அடுத்து இந்த படம் ஏப்ரலில் ரிலீஸ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முதல் படியாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

’ஒரு குட்டி கதை’ என்று தொடங்கும் இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ’மாஸ்டர்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் அறிவிப்பு சமூக வலைதளங்களில் உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தளபதி விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு குட்டிக் கதையை கூறுவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அவருடைய படத்தின் பாடலே ஒரு குட்டி கதை என்று ஆரம்பிக்க உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த குட்டி கதையை கேட்க ரசிகர்கள் இன்னும் இரண்டு நாள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் கடந்த சில வருடங்களாக விஜய், தான் நடித்து வரும் படத்தில் ஒரு பாடலை பாடி வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த குட்டிக்கதை பாடலையும் அவர்தான் பாடியிருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Post a Comment

CAPTCHA
Refresh

*