ஜானு நடிப்பு சூப்பர்…. உன்ன நினைக்காத நாளே இல்ல – 96 பட நண்பர்கள் பாராட்டு மழை !
ஆதித்யா பாஸ்கர் மற்றும் கவுரி கிஷான்
96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ள கவுரி கிஷானுக்கு ஆதித்யா பாஸ்கர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருந்த 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது. இப்படத்தில் அமோக வெற்றியை அடுத்து தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த வாரம் வெளியானது.
ஜானு படத்தில் சமந்தாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் 96 படத்தில் நடித்த ஜானுவாக தமிழில் நடித்த கௌரி கிஷானே நடித்துள்ளார். அவரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்த ஆதித்யா பாஸ்கர் இந்த படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் கவுரியைப் பாராட்டினார். இதற்குப் பதிலளித்த கவுரி ‘ஆதி, படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் உன்னை நினைக்காமல் இருந்தது இல்லை.’ எனத் தெரிவித்து தனது அன்பைப் பகிர்ந்துள்ளார்.