By February 16, 20200 CommentsReport

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த இந்தி நடிகை!

மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படம் பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகிவருகிறது. இப்படத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடிக்கும் ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். அதனாலே சினிமா பிரியர்களுக்கு படத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கல்கி நாவலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில்
ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு முழுக்க முழுக்க தாய்லாந்தில் நிறைவடைந்ததையடுத்து சென்னை மற்றும்
பாண்டிச்சேரியில் நடந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு ஹைதராபாத் விரைந்தனர் படக்குழுவினர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் பாலிவுட் நடிகை சோபிதா துளிப்பாலா இணைந்துள்ளதாக சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தின் மூலம் முதன் முறையாக இவர் தமிழில் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. இது குறித்த
அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*