பர்ட்ஸ் லுக் எப்படி..? இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு – எஸ்கே ரசிகர்களை அலார்ட் செய்த டாக்டர் டீம்!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு மத்தியில் பெரிதாக பேசப்படும் நடிகர் சிவகார்திகேயன் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் “டாக்டர்” என்ற புது படத்தில் நடித்து வருகிறார். நெல்சன், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த “கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் என்பது நம் அனைவரும் அறிந்ததே. அதையடுத்து தனது இரண்டாவதாக டாக்டர் படத்தை சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி வருகிறார்.
KJR ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். கேங் லீடர் என்ற தெலுங்கு படத்தில் நடித்த ப்ரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் வினய்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு 11.03 மணிக்கு வெளியிட்டனர். ஆப்ரேஷன் செய்துவிட்டு சாதனை செய்தது போன்று கெத்தாக அமர்ந்துள்ள எஸ்கேவை ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.
அதற்குள் தற்போது மீண்டும்
கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தந்து ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் ஃபர்ஸ்ட் லுக் எப்படி? இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கிறது. என கூறி எஸ் கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.