கியாரா அத்வானி ஹாட் புகைப்படம் – பொங்கி எழுந்த கலாச்சார காவலர்கள் !
பாலிவுட் நடிகை கியாரா அத்வானி சமீபத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் கணடனங்களை சந்தித்துள்ளது.
பாலிவுட்டில் லஸ்ட் ஸ்டோரிஸ் மூலம் அறிமுகமான கியாரா அத்வானி அதன் பின் குறுகிய காலத்தில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் நடத்திய போட்டோ ஷூட் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அரை நிர்வாணமாக இருக்கும் அவர் ஒரு இலையை கொண்டு உடலின் மேல் பகுதியை மறைத்துக் கொள்வது போல அந்த படம் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஹிட்டானதை அடுத்து கண்டனங்களையும் சந்தித்துள்ளது.
கலாச்சார காவலர்கள் சிலர் அவர் இந்தியக் கலாச்சாரத்தை குலைக்கும் வகையில் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக சொல்ல அதனை மறுத்த கியாரா ‘இது கலையின் ஒரு பகுதி. இப்படத்தில் ஆபாசம் கிடையாது’ எனப் பதிலளித்துள்ளார்.