By February 22, 20200 CommentsReport

இந்திய 2 விபத்தில் இறந்த கிருஷ்ணா பிரபல கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் – வெளியான புகைப்படம்!

ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தின் படிப்பிடில் நேர்ந்துள்ள கோர விபத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டில் இந்தியன் 2படத்தின் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும்
பணியில்
ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென கிரேன் அறுந்து விழுந்தது.

இதில் இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, ஷங்கரின் பிஏ மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் என மூன்று இறந்துவிட்டனர். 10 பேர் காயம்
படுகாயம் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் தமிழ் திரையுலகமே கருப்பு தினமாக மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த சம்பவத்தில் உயிரிழந்த துணை இயக்குனர் கிருஷ்ணா பிரபல கார்ட்டூனிஸ்ட் மற்றும் விமர்சகரான மதன் அவர்களின் மருமகன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணா மதனின் இளைய மகள் அமிதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கமலின் நெருங்கிய நண்பர் மதன் அன்பே சிவம் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*