By February 26, 20200 CommentsReport

உடைந்தது கூட்டணி?: மிஷ்கினுக்குப் பதிலாக துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் விஷால்…!!

2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். அரோல் கரோலி இசையமைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்ததாக உருவாகிறது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். துப்பறிவாளன் படத்தில் நடித்த பிரசன்னாவும் இதில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு லண்டனில் தொடங்கியது. எனினும் சமீபகாலமாக மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

படத்தின் பட்ஜெட் தொடர்பாக மிஷ்கின் – விஷால் நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறியுள்ளதாகவும் இதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே தொடர்ந்து இயக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் மிஷ்கினுக்குப் பதிலாக துப்பறிவாளன் 2 படத்தைத் தான் இயக்குவதை விஷால் உறுதி செய்துள்ளார்.

இதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தில் நேர்ந்துள்ள மாற்றங்கள் குறித்து விஷாலிடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*