By February 26, 20200 CommentsReport

கிரிக்கெட் வீரருடன் காதலா?: மெளனத்தைக் கலைத்தார் நடிகை அனுஷ்கா…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரை நடிகை அனுஷ்கா காதலித்து வருகிறார் என்று கடந்த சில நாள்களாகச் செய்திகள் வெளிவந்தன.

இதுகுறித்து உடனடியாகப் பதில் அளிக்காமல் இருந்த அனுஷ்கா, தற்போது தன்னைப் பற்றிய செய்திக்குப் பதில் அளித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தச் செய்தியில் எவ்வித ஆதாரமும் கிடையாது. இல்லாததும் பொல்லாததுமாகக் கூறுகிறார்களே என எனக்கு வருத்தமாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் திருமண முடிவை பெற்றோரிடம் விட்டுவிட்டேன். பொய்யான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் திருமணம் செய்துகொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு பாகுபலி நட்சத்திரம் பிரபாஸுடன் இணைத்துப் பேசப்பட்டார் அனுஷ்கா. அதை மறுத்த அனுஷ்கா, தற்போது கிரிக்கெட் வீரரைக் காதலிப்பதாக வெளியான செய்திகளையும் மறுத்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*