ஓரினச்சேர்க்கை படத்தை பாராட்டிய குஷ்பு
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ஓரினச்சேர்க்கை படத்தை குஷ்பு பாராட்டியுள்ளார்.
ஓரினச்சேர்க்கை படத்தை பாராட்டிய குஷ்பு
குஷ்பு
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’ஷுப் மங்கள் ஸ்யாதா ஸாவ்தான்’. இந்த படத்துக்கு இந்தி திரையுலகில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களின் திருமணத்துக்காக எப்படி பெற்றோரை சம்மதிக்க வைக்கிறார்கள் என்பதை இந்த படம் விளக்குகிறது. விமர்சகர்களும் இந்தப் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தில் நடித்ததற்காக ஆயுஷ்மான் குரானாவுக்கு நடிகை குஷ்பு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குஷ்பு டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்த படத்தை எடுத்தவர்களுக்குப் பாராட்டுகள். அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கும் படம். இயக்குனர் ஹிதேஷ் கேவல்யா இந்தக் கதையை மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். இப்படி ஒரு படத்தை எடுத்ததற்கு இதை எடுத்தவர்கள் பெருமைப்பட வேண்டும். இந்தக் குழுவுக்குப் பெரிய வாழ்த்துகள். ஆயுஷ்மான், சினிமாவில் புதிய பாதையைத் திறந்துள்ளீர்கள். வித்தியாசமாக யோசிக்க ஊக்குவித்திருக்கிறீர்கள்.
குஷ்பு பாராட்டிய திரைப்படம்
இதுவரை மூடி மறைவாக வைத்திருந்த கதைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கதாசிரியர்கள் தயாராக இருக்கின்றனர். நவீன சினிமாவுக்குப் புதிய பெயர் கிடைத்திருக்கிறது.
இந்தப் படம் ஒரு நல்ல கலைப்படைப்பு. இந்தக் குழுவால் அட்டகாசமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நடித்த அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்”. இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.