By February 28, 20200 CommentsReport

படத்திற்காக உடல் எடையை குறைத்த அருள்நிதி…!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான அருள்நிதி, புதிய படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளாராம்.

படத்திற்காக உடல் எடையை குறைத்த அருள்நிதி
அருள்நிதி
‘வம்சம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இப்படத்தை அடுத்து வெளியான ‘மௌனகுரு’ படம் சிறந்த வெற்றிபடமாக அமைந்தது. இப்படத்தை அடுத்து வெளியான ‘டிமாண்டி காலனி’, ‘ஆறாது சினம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ’கே13’ ஆகியவை ரசிகர்களை கவர்ந்த படங்களாக அமைந்தது. இவர் தற்போது களாத்தில் சந்திப்போம் மற்றும் சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அருள்நிதி அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘எருமை சாணி’ விஜய் இயக்கும் படத்தில் அருள்நிதி நடிக்க உள்ளார். இப்படம் மூலம் ‘எருமை சாணி’ விஜய் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தயாரிக்க உள்ளார்.

விஜய்-அருள்நிதி

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அருள்நிதி கல்லூரி மாணவராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக அருள்நிதி 7 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*