By February 28, 20200 CommentsReport

டாக்டர் படத்தில் இணைந்த ஜீ தமிழ் பிரபலம் அர்ச்சனாவின் மகள்!


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு மத்தியில் பெரிதாக பேசப்படும் நபராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த கமர்ஷியல் திரைப்படமான “நம்ம வீட்டு பிள்ளை” ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வெற்றிநடை போட்டது.
அதையடுத்து நடிகர் சிவகார்திகேயன் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் “டாக்டர்” என்ற புது படத்தில் நடித்து வருகிறார்.

நெல்சன், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த “கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் என்பது நம் அனைவரும் அறிந்ததே. அதையடுத்து தனது இரண்டாவதாக டாக்டர் படத்தை சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிவருகிறார்.
KJR ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

கேங் லீடர் என்ற தெலுங்கு படத்தில் நடித்த ப்ரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் வினய்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் வெளியானது. இந்நிலையில் தற்போது டாக்டர் படத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் குழந்தை தொகுப்பாளியான சாரா இணைந்துள்ளார். இவர் பிரபல தொகுப்பாளி அர்ச்சனாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*